Tuesday 24 January 2012

108

108ன் சிறப்பு தெரியுமா?


108ன் சிறப்பு தெரியுமா?

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

rules nd principles

அர்த்த சாஸ்திரம் - சில வரிகள்



1.பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.

11.மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

12.வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

13.முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

14.யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

15. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

16. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

17.சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

18. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.

evry thing s god

குரு பூர்ணிமா

குருவே உயர்வாகும் ! குருவே உணர்வாகும் !
குருவே உயிராகும் ! குருவே உலகமுமாகும் !
குருவே அன்பாகும் ! குருவே அறமுமாகும் !
குருவே கருணையாகும் ! குருவே கடவுளாகும் !



குருவே மானுடம் வெல்லவைத்த குருவடி போற்றி நின்றேன்
குருவே குண்டலி குத்தியுனர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே ஆறாதார உணர் உணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே கருவிடைக் கருத்துணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்


குரு சரணம்

குருவே சரணம் ! குருவே சரணம் !
குருவடி சரணம் ! குருபாதம் சரணம் !
குரு உரு சரணம் ! குரு சொல் சரணம் !
குரு பார்வை சரணம் ! குரு உணர்வே சரணம் !


உருநாடி குரு நாடி
இட நாடி வட நாடி
நடு நாடி நாட நாடி
உரு நாடி திரு நாடியே

god anthem

இறை வாழ்த்து


மண்ணாய், மரமாய், ஊனாய், உணவாய், மணமாய்

மலர்ந்த வெளியே வாழி !
தண்ணாய், நீராய், தகதக நெருப்பாய், சுவையாய், பார்வையாய்
படர்ந்த வெளியே வாழி !
விண்ணாய் விரிந்து, காற்றாய் கரைந்து, ஒலியாய் தொட்டு
நின்ற வெளியே வாழி !
கண்ணாய், மனத்தினுள் கருத்துணர்ந்து உள்ளொளியாய்
ஒளிர்ந்து நின்ற வெளியே வாழி !
குரு
தானாக தேடி வந்து, தன்னில் ஒரு துளியை உணர்த்தி, தன்னை பின்தொடர வைக்கும் பெருங்கருணை - குரு 

- வள்ளல் பெருமான்

guru geethhai

குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை


---- ஸ்ரீ குரு கீதை

Sunday 4 December 2011

hidden truth

சிந்தனை செய் மனமே !
-----------------------------------

காலைமாலை நீரிலே முழுகு மந்தமூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும் 

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்றிலொன்றையும்

மூலமே நினைந்திராகில் முத்தி சித்தியாகுமே !

-------------------------------------------------------------------------------
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ !

-------------------------------------------------------------------------------
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 

வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 

ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 

எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்

ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே !

-------------------------------------------------------------------------------
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே !

-------------------------------------------------------------------------------
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே !

-------------------------------------------------------------------------------
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ 

வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 

வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 

புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே 

புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய் 

புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே !

-------------------------------------------------------------------------------
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் 

மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும் !

-------------------------------------------------------------------------------
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ 

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ 

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே !

-------------------------------------------------------------------------------
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா 

இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ 

பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ 

பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே !

-------------------------------------------------------------------------------
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 

வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 

மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 

சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே !

-------------------------------------------------------------------------------
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 

சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் 

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் 

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே !

-------------------------------------------------------------------------------
கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா 

வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா 

ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் 

காயமான பள்ளியில் காணலாம் இறையையே !

-------------------------------------------------------------------------------
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை 

தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே? 

பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள் 

சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் 

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே 

காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே 

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே !

-------------------------------------------------------------------------------
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் 

செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் 

உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் 

அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே !

-------------------------------------------------------------------------------
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே !

-------------------------------------------------------------------------------
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் 

வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் 

நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் 

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே !