இறை வாழ்த்து
மண்ணாய், மரமாய், ஊனாய், உணவாய், மணமாய்
மலர்ந்த வெளியே வாழி !
தண்ணாய், நீராய், தகதக நெருப்பாய், சுவையாய், பார்வையாய்
படர்ந்த வெளியே வாழி !
விண்ணாய் விரிந்து, காற்றாய் கரைந்து, ஒலியாய் தொட்டு
நின்ற வெளியே வாழி !
கண்ணாய், மனத்தினுள் கருத்துணர்ந்து உள்ளொளியாய்
ஒளிர்ந்து நின்ற வெளியே வாழி !
No comments:
Post a Comment